Flash News

ஆலய வளர்ச்சி அறிக்கை-1999 வரை

home // அறிக்கை-1999

மீசாலை வடக்கு தட்டான் குளம் அருள்மிகு திருநீலகண்ட பிள்ளையார் ஆலயத்தின் வளர்ச்சி

நொத்தரிஸ் V. வேலுப்பிள்ளை அவர்களால் 30.3.1872 இல் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 66ம் இலக்கத்தைக் கொண்ட நெற்காணிகளின் உறுதியில் சோமசுந்தரம் கணபதிநாதக்குருக்கள், கோவிலடியென்னும் காணியில் எழுந்தருளியிருக்கும் மேற்படி ஆலயத்தின் பராமரிப்புக்காரனாக பிரஸ்தாபித்திருப்பதால் ஆலயகர்த்தா இவரின் மூதாதையராக கொள்ள இடமுண்டு.

கணபதிநாதக்குருக்களிடம் பிரசித்த நொத்தரிஸ் T.C. சங்கரப்பிள்ளையினால் 30.07.1903 இல் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 550 இலக்க மரண சாதனத்தை ஏற்றுக் கொண்டவராகிய பரமசாமிக்குருக்கள் சோமசுந்தரக்குருக்கள் 08.07.1932க்கு முன்பே ஆலயத்தை பராமரிக்க தவறிவிட்டார் என்பதை பிரசித்த நொத்தரிஸ் வ.சி. கார்த்திகேசு அவர்களினால் 08.07.1932 இல் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 1247 இலக்கத்தைக் கொண்ட ‘டிறஸ்றி’ உறுதி துலாம்பரமாக எடுத்துரைக்கின்றது.

அப்போதைய கிராம அலுவலர் சி. கந்தையா அவர்களால் முடிக்கப்பட்ட மேற்படி ‘டிறஸ்றி’ உறுதி திருவாளர்கள் வினாசித்தம்பி பொன்னையா, முத்து ஆறுமுகம், பொன்னம்பலம் அம்பிகைபாகர், கணபதிப்பிள்ளை வைத்திலிங்கம், சுவாமிநாதர் சின்னப்பு ஆகியோர் அறங்காவலர்களாகவும் திரு வேலுப்பிள்ளை ஆறுமுகம் கணக்காய்வாளர்களாகவும் தெரிவு செய்து நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.

1953-1965 காலப்பகுதியில் தலைவராக திரு. செல்லையா அவர்களும் அவரைத்தொடர்ந்து திரு. த. இராசரத்தினம் அவர்களும் செயலாளராக திரு வே. பொன்னுத்துரை அவர்களும் அவரைத்தொடர்ந்து திரு. சி. கார்த்திகேசு அவர்களும், பொருளாளராக பெ. செல்லையா அவர்களும் ஆலயத்தை நிர்வகித்துள்ளனர். குறித்த அறங்காவல் சபை 1952 அல்லது 1953 வரையே செயல்பட்டதாக தெரிகிறது.

1965-1978 வரையிலான காலப்பகுதியின் தலைவராக திரு கணபதிப்பிள்ளை வைத்தியலிங்கம் அவர்களும் செயலாளராக திரு.சி. சுவாமிநாதப்பிள்ளை அவர்களும் அவரைத்தொடர்ந்து திரு இ. சரவணமுத்து அவர்களும் பொருளாளராக திரு வை. பரமசாமி அவர்களும் அவரைத்தொடர்ந்து திரு வை. சுப்பிரமணியம் அவர்களும் துணை செயலாளராக திரு. சி. சிவகுரு அவர்களும் பரிபாலித்துள்ளனர்.

(காலப்பகுதி அண்ணளவானது)

13-06-1980இல் சாவகச்சேரி உதவி அரசாங்க அதிபர் க. துரைராசா அவர்கள் தலைமையில் கூடிய பொதுச்சபையில் பரிபாலன சபையின் யாப்பு அங்கீகரிக்கப்பட்டு கீழ்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

திருவாளர்கள்

இ. சரவணமுத்து - தலைவர்

ஆ. மயில்வாகனம் - உப தலைவர்

சி. இராமலிங்கம் - செயலாளர்

செ. நாகேந்திரம் - உதவி செயலாளர்

வ. சுப்பிரமணியம் - பொருளாளர்

க. வேலாயுதம்பிள்ளை - கணக்காய்வாளர்

க. ஆறுமுகம் - உறுப்பினர்

ஏ. தியாகராசா - உறுப்பினர்

வே. நாகராசா - உறுப்பினர்

க. தருமலிங்கம் - உறுப்பினர்

கா. நடராசா - உறுப்பினர்

வே. கந்தையா - உறுப்பினர்

தற்போதைய (1999) சபையிலுள்ள கெளரவபதவி அலுவலர்கள், உறுப்பினர்கள்

இ. சரவணமுத்து - தலைவர்

சி. இராமலிங்கம் - உப தலைவர்

வே. நாகராசா - செயலாளர்

ந. பாலச்சந்திரன் - உதவி செயலாளர்

வை. சுப்பிரமணியம் - பொருளாளர்

கு. சிவானந்தம் - கணக்காய்வாளர்

உறுப்பினர்கள்

சி. சிவகுரு

மு. தனபாலசிங்கம்

க. சின்னையா

கி. கிருஷ்ணசாமி

சி. வாரித்தம்பி

மேற்கூறிய காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திருப்பணிகள்
(1932-53)

மடப்பள்ளி திருத்த வேலைகள் தவிர்ந்த வேறு குறிப்பிடக்கூடிய அபிவிருத்தி வேலைகள் நடந்ததாக தடயமில்லை.

(1953-65)

தரிசன வசந்த மண்டபங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நித்திய பூசை மற்றும் திருவெம்பாவை, சிவராத்திரி, பெருங்கதை, சித்திரா பெளர்ணமி பூசைகள். பாலஸ்தாபனம் நடைபெற்றுள்ளது. வசந்த மண்டபம் (உபயம்:- திரு பெ. செல்லையா)

(1965-78)

கோபுரவாசல், மணிக்கூட்டுக்கோபுரம், வைரவர், சுப்பிரமணியர், பரிவார ஆலயங்கள், சுற்றுமதில், மின்னிணைப்பு ( சுப்பிரமணியர் ஆலயம்- உபயம்:- திரு. திருமதி சி. கிருஷ்ணசாமி தம்பதியினர்)

புனர்நிர்மானம்

கற்பகக்கிருக தூபி, மடப்பள்ளி களஞ்சிய திருத்தம்

சமய மேம்பாடு

மகா கும்பாபிகேஷம், அலங்கார உற்சவம், காலை-மாலை தினப்பூசை, சதுர்த்தி, திருவெம்பாவை, பெருங்கதை, சித்திரா பெளர்ணமி, சிவராத்திரி

(1979-99)
புனர்நிர்மானம்

தரிசன வசந்த மண்டபங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டமை. மகா நிருத்த, யாக மண்டபங்கள், மடப்பள்ளி, களஞ்சியம்,குருக்கள் அறை, திரவியசாலை, வாகனசாலை, பூ அறை, தெற்குவாசல்வரை தெற்கு வீதிக்கொட்டகை, கோபுரவாசல் மண்டபம், தம்பப்பிள்ளையார் ஆலயம், அர்த்த மகா மண்டபங்களுக்கு கூறைகள், சகடைக்கொட்டில், தரிசன மண்டபத்தை கோபுரவாசலுடன் இணைத்தமை, நந்தகோபாலன் ஆலயம் (உபயம்:- திரு வை. சுப்பிரமணியம்)

புனர்நிர்மானம்

சுற்றுமதில், குழாய்கிணறு, திருக்குளம், வசந்த மண்டபம், குழாய்கிணற்றுக்குரிய பம், புற வீதி, மாபிள்கள் பதித்தல், அணைத்துக்கட்டுமானங்களுக்கும் மை பூசுதல், மின்இணைப்பு, கற்பகக்கிருகதூபி.

தளபாட உபகரணங்கள்

சண்டேசுவரர், அஸ்திரதேவர், பலிபீடம், கொடித்தம்பம், தங்க சங்கிலி, வாகனம், கட்டுத்தேர், சகடை, சங்கு, திருவாசி,குடை, வாகைமாலை, செம்பு, தாம்பாளம், தீபங்கள், வாங்கு, மேசை,கிடாரம், கத்தி, கோடாரி, துருவலகை என இப்பட்டியல் நீண்டுகொண்டு செல்லும்.

குறிப்பாகக்கூறின், மடப்பள்ளி உள்ளிட்ட ஆலயத்தின் சகல உபகரணங்கள், தளபாடங்களில் 95 வீதத்திற்குமேல் இக்காலப்பகுதியில் வாங்கியவையும் வழிபடுனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டனவையாகும். கட்டுத்தேர் திரு. திருமதி சி. கிருஷ்ணசாமி தம்பதியினரின் உபயம்.

பரிபாலனம்

01.ஒற்றிமீழப்பட்டது பிரசித்த நொத்தரிஸ் இ. இராசாவால் 22.09.84இல் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 4719 இலக்க உறுதி.

02.ஒற்றி சாட்டுதல் அழிக்கப்பட்டது. இலக்க F206/230 17.09.84. பிரசித்த நொத்தரிஸ் வ.சி. கார்த்திகேசு உறுதி இலக்கம் 5447-19-16-41

03.இனம் காணப்பட்ட மூன்று காணிகளுள் ஒன்று பிரசித்த நொத்தரிஸ் இ. இராசாவால் 19.02.86 இல் அத்தாட்சி செய்யப்பட்ட 5302ம் இலக்கம் கொண்ட பிரிவிடல் உறுதி.

04.கோரக்கன்கட்டு நெற்காணி குத்தகை தொடர்பாக கமநல சேவை ஆணையாளரினால் 28.02.84 இல் வழங்கிய தீர்ப்பு இல ASL/18/60.

05.கோரக்கன்கட்டு வயல் நில அளவை செய்தமை பட இல 211 தேதி 31.08.82 நில அளவையாளர் வி. சிவராசா

06.அர்ச்சனை சிட்டு முறை

07.பதிவேடுகள் பேணுதல்

சமய மேம்பாடுகள்

11-06-1986 இல் மகா கும்பாபிஷேகம் -திரு. திருமதி சி. கிருஷ்ணசாமி தம்பதியினர் உபயம்

29.4.98 இல் நவகுண்டபசு கும்பாபிஷேகம்

வெள்ளிக்கிழமைதோறும் கூட்டுப்பிரார்த்தனை

சமயப்பெரியார்களின் சொற்பொழிவு

இளைஞர்களுக்கான சமய அறிவு போட்டி சான்றிதழ், பரிசு வழங்கல்,

இளைஞர் வீதிகளில் திருவெம்பாவை ஓதல்,

திருவாதவூரடிகள் புராணபடனம்,

திருநாவுக்கரசு சுவாமிகள் புராண படனம்,

பன்னிரு திருமுறை ஓதுதல்,

திருவாசகம் ஓதுதல்,

மகேஸ்வர பூசை,

தொண்டர்களை பாராட்டி விருது வழங்குதல்,

காலை, காலை காலம் தவறாது பூசைகள்,

மாத சங்கிராந்தி அபிஷேகம்,

சதுர்த்தி அபிஷேகம்,

கும்பாபிஷேக நட்சத்திர அபிஷேகம்,

பங்குனி உத்தர அபிஷேகம்,

சித்திரா பெளர்ணமி அபிஷேகம்,

நவராத்திரி,

ஜப்பசி வெள்ளி அபிஷேகம்,

கார்த்திகை திங்கள் அபிஷேகம்,

கந்தசட்டி அபிஷேகம்,

திருவெம்பாவை அபிஷேகம்,

தைப்பூசம்,

சிவராத்திரி அபிஷேகம்,

மணவாளகோல அபிஷேகம்,

மகோற்சவம்,

விநாயக சஷ்டி,

மாசி மகம்,

ஆடிப்பூரம்,

நிறைவுரை

1965-78 காலப்பகுதியின் தலைவர் கணபதிப்பிள்ளை வைத்தியலிங்கம் அவர்கள் ஆலயத்திற்கு சொந்தமான 17 ஏக்கர் நெற்காணியின் குத்தகைப்பணத்துடன் கணிசமான தனது சொந்தப்பணத்தையும் கொண்டு அப்பாரிய திட்டத்தை காணித்தகராறு, குத்தகை பிரச்சனைகளுக்கு மத்தியில் சிறிதும் அயராது நிறைவேற்றியுள்ளார்.

கிரீடம் வைத்ததுபோல் பூசகர் வதிவிட முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆலயத்தின் காணியில் கட்டும் வாய்ப்பு அருகிய நிலையில் அருகிலுள்ள தனது காணியில் இரு அறைகள் கொண்ட வீடும் மலசல கூடமும் அமைத்து உதவியுள்ளார்.

1932-78 வரை ஆலய மேம்பாட்டில் அயராது கண்ணும் கருத்துமாக உழைத்து வந்துள்ளார் என்பதை வரலாற்று தடயங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. மேற்படி காலப்பகுதி, உத்வேகம் நிரம்பிய திருப்புமுனை எனக்கொண்டால் 1953-65 காலப்பகுதி வழிபடுநர்களின் பங்களிப்புடன் வளர்ச்சிக்கு கால் கோள் இட்ட காலப்பகுதியெனக் கொள்ளலாம்.

1932-53 காலப்பகுதியில் நித்திய நைமித்திய பூசைகளிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளனர் எனக்கொள்ளலாம். நிறைவுரையில் இறுதியாக நோக்கை முன்னிலைப்படுத்தி உன்னிப்பாக நகர உந்துசக்தியாக விளங்கியவர்களுள் தலையானவர்கள் திரு. திருமதி சி. கிருஷ்ணசாமி தம்பதியினர். நித்திய, நைமித்திய பூசைகளிலும், காணிக்கை அல்லது கைங்கரியத்துறையிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள் எனக்குறிப்பிடப்படுவதுடன் இவ்வரலாற்று சாதனம் முழுமை பெறுகிறது.

இ. சரவணமுத்து

10.10.1999

முன்னாள் பரிபாலன சபை தலைவர் இ. சரவணைமுத்துவினால் ஆக்கப்பட்ட கையேட்டின் மீள்பிரசுரம்