ஆலய திருப்பணிகளுக்கு பங்களிப்பதற்கு
எம்பெருமான் திருநீலகண்ட பிள்ளையாரின் அடியார்களே, அன்பர்களே!
கணபதிநாதக்குருக்களிடம் பிரசித்த நொத்தரிஸ் T.C. சங்கரப்பிள்ளையினால் 30.07.1903 இல் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 550 இலக்க மரண சாதனத்தை ஏற்றுக் கொண்டவராகிய பரமசாமிக்குருக்கள் சோமசுந்தரக்குருக்கள் 08.07.1932க்கு முன்பே ஆலயத்தை பராமரிக்க தவறிவிட்டார் என்பதை பிரசித்த நொத்தரிஸ் வ.சி. கார்த்திகேசு அவர்களினால் 08.07.1932 இல் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 1247 இலக்கத்தைக் கொண்ட ‘டிறஸ்றி’ உறுதி துலாம்பரமாக எடுத்துரைக்கின்றது.
தற்போது உள்வீதிக்கான தெரோசா போடும் பணியானது குறிப்பிடத்தக்க கட்டத்தினை எட்டியுள்ளது. எம்பெருமானின் இத்திருப்பணிகளை, இவ்வாலயத்தை சூழவுள்ள அன்பர்கள் மற்றும் உள்ளூர், வெளிநாட்டில் வதியும் அடியவர்களது உதவிகளுடன் நடைபெற்று வருகிறது. எம்பெருமானின் இத்திருப்பணி வேலைகளை காலநேரத்துடன் முன்னெடுக்க மேலதிக நிதி தேவையாக உள்ளதனால், ஆலய அடியவர்கள்,அன்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இத்திருப்பணியில் தாங்களும் இணைந்து ஆலய கைங்கரியங்களை முன்னெடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆலயத்தின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கு விபரங்கள் பின்வருமாறு,
மக்கள்வங்கி (Peoples Bank Chavakachcheri)
Thaddaankulam Thiruneelakanda pillaiyar aalaya paripaalana sapai) தட்டாங்குளம் திருநீலகண்ட பிள்ளையார் ஆலய பரிபாலன சபை)
கணக்கு இலக்கம் (account number) - 110-1-001-6-0000607
Foreign remittances swift code - PSBKLKLX
தங்களது அன்பளிப்புகளை இந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பதுடன் எமக்கும் உடன் அறிய தரவும்.
நன்றி.
ஆலய திருப்பணிச்சபை.
ந. பாலச்சந்திரன் ( 0772021322) - தலைவர்
மு. சிவசுப்பிரமணியம் (0773024551)- செயலாளர்