கணபதி ஹோமம் 15.12.2024
ஆலய நிகழ்வு விவரங்கள்
தட்டாங்குளம் திருநீலகண்டப்பிள்ளையார் ஆலய அடியார்களே, அன்பர்களே!
வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதியன்று (15.12.2024) - பெருங்கதை - விநாயகர் விரத ஆரம்பத்திற்கு முதல் நாள் கணபதி ஹோமத்தினை இவ்வருடமும் அடியவர்கள் எல்லோரினது பங்களிப்புடன் நடாத்த எம்பருமானின் திருவருள் கிட்டியுள்ளது.
கடந்த 3.11.2024 இல் ஆலய முன்றலில் நடைபெற்ற கூட்டத்தின் பிரகாரம் அடியவர்கள் அனைவரும் இணைந்து யாகத்தினை நடத்துவதாகவும் உள்நாடு / வெளிநாட்டு அடியவர்கள், அன்பர்கள் தங்களால் முடிந்த பொருள் மற்றும் நிதி உதவிகளை இக் கைங்கரியத்திற்க்கு வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. பங்களிப்பு செய்ய விரும்பும் அடியவர்கள் நிர்வாகத்தினை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளுக்கு சுமார் ரூ இரண்டு கோடி (இருபது மில்லியன்) நிதினை பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் உதவிய 145 உள் நாடு மற்றும் வெளிநாடு வாழ் அடியவர்கள் மற்றும் அன்பர்கள் ஆலயத்திற்கு தொடர்ந்து செய்து வரும் உதவியினை கருத்தில் கொண்டு,
அவர்களின் பெயர் விவரங்களை ஒவ்வோர் வெள்ளிக்கிழமை பூசையின்போது அர்ச்சனைகளாக கருதி வாசிக்கும்படி பரிபாலன சபை அர்ச்சகரிடம் கேட்டுக்கொண்டது. அதற்கிணங்க இவ்வாரம் முதல் வரும் மகோற்சவம் வரை ,இது நடைமுறையில் இருப்பதாகவும் திர்மானிக்கப்பட்டது.
மேலும் அபிஷேக பூசைகள் மேற்கொள்ளும் அடியவர்களிடமிருந்து குறைந்தது ரூ 500 இனை ஆலயத்தின் பொது திருப்பணிக்காக அறவிடுவதென்பதும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டு அடியவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது.
ஆலயம் சார் அனைத்து விடயங்களும் தொடர்பாடல்களும் ஆலய இணையத்தளத்தில் (https://thattankulampillayar.org/) பதிவிடப்படும். இச்சந்தர்ப்பத்தில் ஆலயத்திற்கான இணையத்தளத்தினை வடிவமைப்பதற்கு நிதி உதவி புரிந்த திரு குகீந்தன் மற்றும் திரு பாரதிகுமார் அவர்களுக்கு பரிபாலனசபையின் சார்பில் மிகவும் நன்றி கூறுகின்றோம்.
“மெய்மை உணர்வாய் உட்சென்றால்
கைமேல் பலனாய் ஒளி நிலவும்
வேண்டியதெல்லாம் வசமாகும்
தட்டாங்குளத்தான் கருணையினால்
தடைகள் நீங்கும் சத்தியமே!”
ஆலய பரிபாலன சபை