Flash News

ஆலய நிகழ்வு விவரங்கள்

home // ஆலய நிகழ்வு விவரங்கள்

கணபதி ஹோமம் (2024)

November 30, 2024
ஆலய நிகழ்வு விவரங்கள்

தட்டாங்குளம் திருநீலகண்டப்பிள்ளையார் ஆலய அடியார்களே, அன்பர்களே!

கணபதி ஹோமம் (2024)

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் கார்த்திகை மாதம் 30 ஆம் நாள் 15 /12/2024 ஞாயிற்றுக்கிழமை பூரணை தினத்தன்று காலை 7:30 மணி முதல் விநாயகர் வழிபாடுடன் ஆரம்பித்து கடஸ்த்தாபனம், யாக பூஜை, கணபதி ஹோமம், சங்காபிஷேகம், விசேஷ பூஜை, மகேஷ்வர பூசை மற்றும் சுவாமி திருவீதி உலா என்பனவற்றுடன் நிகழ திருவருள் கைகூடி உள்ளது. 

- [ ] 16/12/2024 திங்கட்கிழமை- பெருங்கதை ஆரம்பம்

- [ ] 05/01/2025 ஞாயிற்றுக்கிழமை - விநாயகர் சஷ்டி விரதத்துடன் நிறைவு பெறும். 

ஹோமத்திற்கு நிதி உதவி புரிய விரும்பும் ஆலய அடியவர்கள் மற்றும் அன்பர்கள் ஆலய நிர்வாகத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும். நிதியுதவி அல்லாது தங்களால் இயன்ற சமித்து வகைகள் மற்றும் பொருட்களையும் அடியவர்கள் தந்து எம்பெருமானின் யாகத்தில் பங்கெடுக்கலாம். 

ஆலயத்திற்கான வங்கிக் கணக்கு விபரம் பின்வருமாறு,

மக்கள்வங்கி (Peoples Bank Chavakachcheri)
Thaddaankulam Thiruneelakanda pillaiyar aalaya paripaalana sapai. ( தட்டாங்குள திருநீலகண்ட பிள்ளையார் ஆலய பரிபாலன சபை)

கணக்கு இலக்கம் (account number) - 110-1-001-6-0000607
Foreign remittances swift code - PSBKLKLX

தங்களது அன்பளிப்புகளை இந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பதுடன் எமக்கும் உடன் அறிய தரவும். நன்றி

செயலாளர்
ஆலய பரிபாலன சபை